145
மரண தண்டனை தொடர்பில் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மொனகராலை மாவட்டத்தில் மாரிஅராவ நீர் விநியோக திட்டத்தை திறந்து வைத்து மாரிஅராவ வாராந்த சந்தையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயிரைக் கொல்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது என்பதால் மரண தண்டனையை நிறைவேற்றும் யோசனைக்கு ஆதரவளிக்க முடியாதென்றும் பிரதமர் கூறினார். #மரணதண்டனை #ரணில்விக்ரமசிங்க #ஐக்கியதேசியக்கட்சி
Spread the love