இலங்கை பிரதான செய்திகள்

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய நிலை பிரபாகரனுக்கு இருக்கவில்லை

போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என்றும் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இதனை  கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில், இன்று நிகழ்வொன்றில் எம்.ஏ சுமந்திரன் தனது கருத்துக்களை தெரிவித்தா்ர. இதன்போது, விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பை செய்துள்ளதாகவும் இந்த வரலாறு தெரியாமல் ஜனாதிபதி இப்படி கூறுவது முற்று முழுதான தவறு என்றும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.அத்துடன் இது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல் என்றும் இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார். #போதைப்பொருள்  #வியாபாரம் #பிரபாகரனுக்கு #சுமந்திரன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.