Home பிரதான செய்திகள்உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று

by admin


உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று பேர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் லீக் சுற்றில் இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.  இரு அணிகளும் இதுவரை 148 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 82 போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளதுடன் 61 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.இங்கிலாந்து இதுவரை 3 சந்தர்ப்பங்களில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றபோதிலும் ஒரு தடவையேனும் கிண்ணத்தை கைப்பற்றவில்லை என்பதுடன் 7 தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 5 தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #england #australia #world cup #உலகக்கிண்ண  #அரையிறுதி,

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More