154
File Photo
பிரித்தானியாவிலிருந்து, இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கழிவுகள் அடங்கிய 98 கொள்கலன்களை உடனடியாக திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகளால் குறித்த கொள்களன்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் எபாலி இந்ரரத்ன தெரிவித்துள்ளார். #பிரித்தானியா #மத்தியசுற்றாடல்அதிகாரசபை #சுங்கத்திணைக்களம்
Spread the love