Home இலங்கைஅம்பாறை மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான உலருணர்வு…

அம்பாறை மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான உலருணர்வு…

by admin

பாறுக் ஷிஹான்

குவைத்  நாட்டின் செம்பிறை சங்கத்தின் அணுசரனையுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான உலருணர்வு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. சனிக்கிழமை (13.07.19) காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் 3000 ரூபா பெறுமதியான   உலர் உணவுப் பொருட்களை 215 குடும்பங்கள் பெற்றுக்கொண்டன.

இவ்வுலருணர்வு பொருட்கள் யாவும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை மத்தியமுகாம் சவளைக்கடை காவல்துறைப் பிரிவுகளில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களை காவல்துறையினர் மற்றும் கிராம சேவகர்களுடாக பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.ஜெகதீசன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையின் தலைவர் சட்டத்தரணி சுனில் திஸாநாயக்க உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More