145
‘ராட்சசி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா, தனது கணவர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். திருமணத்திற்குப் பின்னர், 6 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’படம் ஊடாக மீள் பிரவேசம் செய்தார். அதனையடுத்து, ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ ‘காற்றின் மொழி’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார்.
இவர் அண்மையில் அரச பாடசாலை ஆசிரியையாக நடித்திருந்த ‘ராட்சசி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக `குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ’ஜாக்பாட்’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தையும் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார்.
இப்படத்தின்முதல் படம் மற்றும் சுவரொட்டியையும் வெளியிட்ட படக்குழு படத்தின் பெயரையும் அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். #தொடர்ந்தும் #ஜோதிகா #சூர்யா #ராட்சசி #பொன்மகள் வந்தாள்
Spread the love