Home இலங்கைகிளிநொச்சியில் புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்….

கிளிநொச்சியில் புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்….

by admin


கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில், நேற்று இரவு 8.50 மணியளவில் புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் புகையிரதம் மோதியே இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இளைஞர்கள் இருவரும் விபத்து இடம்பெற்ற பகுதியில் புகையிரதம் தண்டவாளத்தின் அருகில் அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்ததாகவும், புகையிரதம் வருவதை அவதானிக்காமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை மாங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More