Home இலங்கைவடக்கின் 84 8168- சதுர மீற்றர் பரப்பளவில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன…

வடக்கின் 84 8168- சதுர மீற்றர் பரப்பளவில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன…

by admin

சார்ப் மனிதநேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனம், வடக்கில் 84 8168- சதுர மீற்றர் பரப்பளவு பகுதியை துப்புரவு செய்துள்ளது இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன், ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபட்டு வருகிறது.

இந் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 யூலை மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் எட்டு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நூற்று அறுபத்து எட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (848,168Sqm) இருந்த, பத்தொன்பதாயிரத்து அறுபத்து நான்கு (19,064) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி அழித்துள்ளதாக நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More