Home இலங்கைஶ்ரீலங்காபொதுஐன முன்னணியின் யாழ் பிரதான அலுவலகம் திறப்பு

ஶ்ரீலங்காபொதுஐன முன்னணியின் யாழ் பிரதான அலுவலகம் திறப்பு

by admin

ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் பிரதான அலுவலகம்  ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை(29)  பயணம் மேற்கொண்டுள்ள ஹம்பாந்தோட்டை  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குழுவினர்  காலை 10 மணியளவில்   நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் குறித்த அலுவலகத்தை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தனர்.

இதன் போது திறப்பு விழாவில் விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மக்களுடனான சந்திப்புகளும் அங்கு இடம்பெற்றன.இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் சமூகமளிக்கவில்லை ஏனைய  ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பிதுரை ரஜீவ்  தலைமையில்  கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் இங்கு   உடனிருந்தனர்.

மேலும் இன்று   யாழ் ஆயர் இல்லம் இ நல்லூர் ஆதின குரு முதல்வர்,முஸ்லிம் மக்கள் தரப்பு , விளையாட்டு கழகங்கள்,என்பவற்றுடன் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.அத்துடன் வடமராட்சி அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில்  மக்கள் மன்றம் ஒன்றும்  அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது.பிற்பகல் 2.00 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக)  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  #ஶ்ரீலங்காபொதுஐன முன்னணி  #யாழ் #பிரதான அலுவலகம் #திறப்பு #நாமல் ராஜபக்ஸ

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More