மருதானை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மாளிகாகந்த வீதி, கொழும்பு 10 பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் இருந்த நபருக்கும் வெளியில் இருந்து வந்த மற்றைய நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளியில் இருந்து வந்த நபர் நிலத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். அதன்போது, சிறிய காயங்களுக்கு உள்ளான வீட்டில் இருந்த 77 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருதானையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது…
21
Spread the love
previous post