194
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 காவல்துறையினர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மோதல் சம்பவத்துடன் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #வெள்ளவத்தை #மோதல் #காவல்துறையினர் #காயம்
Spread the love