இலங்கை பிரதான செய்திகள்

வெள்ளவத்தையில் மோதல் – 3 காவல்துறையினர் உட்பட 6 பேர் காயம்


கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 காவல்துறையினர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மோதல் சம்பவத்துடன் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #வெள்ளவத்தை  #மோதல் #காவல்துறையினர்  #காயம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.