தலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதிக்கு கோதுமை மா 800ற்கும் மேற்பட்ட பைகளை ஏற்றிச்சென்ற கனரக பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் வைத்து, குறித்த பாரவூர்தி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (05.08.2019 ) காலை 9 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக லிந்துலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
பாரவூர்தியில்; சாரதியும், உதவியாளர் உட்பட 5 பயணித்துள்ளதாகவும், ஐவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். #கோதுமை #பாரவூர்தி #விபத்து #காயம்
(க.கிஷாந்தன்)