Home இலங்கைஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதி தேவை :

ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதி தேவை :

by admin


ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதி தேவையென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக் கொள்ளும் பட்டத்தை விடவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அடைந்து கொள்ளும் அனுபவம் பெறுமதி மிக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் சஜித் பிரேமதாச கடந்த 20 வருடங்களாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதானது அவர் ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச இங்கிலாந்திலுள்ள லண்டன் ஸ்கூல் ஒப் எக்கொனமிக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றைப் பெற்றுள்ளார் என்ற போதிலும் நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளும் அறிவை பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எதுஎவ்வாறாயினும் இந்த வார இறுதியிலேயே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படுமென தான் எதிர்பார்ப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #ஜனாதிபதி #தகுதி #லக்ஸ்மன் கிரியெல்ல #சஜித் பிரேமதாச

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More