171
பொலிவியாவில் வைத்தியர்கள் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 14 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். பொலிவியாவின் அப்போலோ பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில்; 11 பெண்கள், 3 ஆண்கள் என 14 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிவியாவில் வீதிப்பராமரிப்பு மோசமாக உள்ளதால், தொடர்ந்து அங்கு வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது #பொலிவியா #பேருந்து #விபத்து #வைத்தியர்கள்
Spread the love