289
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் சிரித்திரனின் கருத்தோவியம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கடந்த 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் யாழிலிருந்து கொழும்பு செல்வோர் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அது தொடர்பில் சிரித்திரன் வரைந்த கருத்தோவியம் ஒன்று அக்காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது , நல்லூரில் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நிலையில் அக்கருத்தோவியம் சிறு மாற்றத்துடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. #நல்லூர் #பக்தர்கள் #கடும்சோதனை #சிரித்திரன் #கருத்தோவியம்
-மயூரப்பிரியன்
Spread the love