இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி கம்போடியா பயணம்

இலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன  கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கம்போடிய அரசாங்கத்தின்  விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி  இன்று (07) முற்பகல் Phnom Penh சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில் அவரை   கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் Khieu Kanharith உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள்  வரவேற்றனர்.

தனது இந்த பயணத்தின்போது ஜனாதிபதி , கம்போடியா நாட்டின் மன்னர் Norodom Sihamoni அவர்களை சந்திக்கவுள்ளதுடன், கம்போடியாவின் பிரதமர் Hun Sen உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.   இதேவேளை ஜனாதிபதி  இன்று பிற்பகல் இலங்கை கம்போடிய வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.  #ஜனாதிபதி  #கம்போடியா #பயணம் #வர்த்தக #சுற்றுலா

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.