இந்தியா பிரதான செய்திகள்

லஞ்சம் வாங்கும் காவல்துறையினர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை


லஞ்சம் வாங்கும் வாங்கும் காவல்துறையினர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே. திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவது கடுமையான குற்றமாக கருதப்படும் எனவும் இதுபோன்ற முறைப்பாடுகள் வரும்போது, அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட காவல்துறையினர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #லஞ்சம்  #காவல்துறையினர்  #நடவடிக்கை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.