ஹொங் கொங் விமான நிலையம் இன்று (13.08.19) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றைய தினம், விமான நிலையம் மூடப்பட்டது. இதனையடுத்து, சுமார் 200 விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
இந்தநிலையில், இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு இணையானது என தெரிவித்துள்ள சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையம் திடிரென மூடப்பட்டதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.