பிரதான செய்திகள் விளையாட்டு

நியூஸிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இலங்கை களமிறங்கியுள்ளது


பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தநிலையில் இன்று நடைபெறுகின்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கி விளையாடுகின்றது.

அந்தவகையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ள போட்டியில், நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது

இலங்கை – நியூசிலாந்தும் அணிகளுக்கு இடையே இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 15 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் 8 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளதுடன் 11 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்துள்ளது.

இலங்கை வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நியூஸிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இலங்கை களமிறங்கியுள்ளது#நியூஸிலாந்து #டெஸ்ட்  #ஜெர்சி #இலங்கை,

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.