Home இலங்கைசஹ்ரான் ஹாஷிமின் மனைவி, நீதவான் முன்னிலையில் ரகசிய சாட்சியமம்…

சஹ்ரான் ஹாஷிமின் மனைவி, நீதவான் முன்னிலையில் ரகசிய சாட்சியமம்…

by admin

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் நேற்று மாலை ரகசிய சாட்சியமளித்துள்ளார்.

கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியான ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத் ஆகியோர் தொடர்பான சாட்சி விசாரணைகளின் போதே அவர் சாட்சியமளித்துள்ளார்.

நீதவான் முன்னிலையில் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியா மற்றும் அவரது நான்கு வயது மகளான மொஹமத் சஹ்ரான் ருக்ஷியா ஆகியோர் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், மற்றைய தற்கொலை குண்டுத்தாரியான மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமதின் தந்தை மற்றும் சகோதரர்களும் நீதவான் முன்னிலையில் அழைத்து செல்லப்பட்டிருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More