இலங்கை பிரதான செய்திகள்

காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

ஹட்டன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து இன்று (17.08.2019 ) காலை 10 மணியளவில் உடல் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று   மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அப்பகுதிக்குச் சென்றிருநத் வேளையில் குறித்த நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று மிதப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து ஹட்டன் காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளனர். எனினும்சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் அட்டன் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினரும் கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். #காசல்ரீ  #நீர்தேக்கத்திலிருந்து #ஆண் சிசு #சடலம் #மீட்பு

(க.கிஷாந்தன்)

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.