Home இலங்கைபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்

பங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்

by admin

பங்களாதேஸ் நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து அழிந்துள்ளன.  நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் சாலண்டிகா குடிசை பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து காரணமாக 50 ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர்.

பல வீடுகளில் பிளாஸ்டிக் கூரைகள் இருந்ததால் தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திவிபத்தினால் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என்ற போதிலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்னும் நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் வீடிழந்து தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோனர் குறைவான வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது  #பங்களாதேஸ் #தீவிபத்து #வீடிழப்பு  #குடிசைப்பகுதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More