மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டத்தின் போது அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 20 வருடங்களின் பின்னரே இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலக மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டிருந்தார்.
அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு மஹந்த ராஜபக்ஸவிற்கும், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவிற்கும் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.