அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாகத் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிராந்திய விவகாரம் பற்றியும் இரு தரப்பு விவகாரம் பற்றியும் சுமார் அரைமணி நேரம் உரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ருவிட்டர் கணக்கில் இதுபற்றிப் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி உரையாடல் இதமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதீத உணர்வெழுச்சியான பேச்சு, இந்திய எதிர்ப்பு வன்முறைகளைத் தூண்டுதல் ஆகியவற்றில் இந்தப் பிராந்தியத்தில் சில தலைவர்கள் ஈடுபடுவது அமைதிக்கு உகந்தது அல்ல என தெரிவித்ததாகவும் பிரதமர் மோடியின் மற்றொரு ருவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #டிரம்ப் #மோடி #தொலைபேசி #உரையாடல்