இராணுவ தளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டமை ஜனாதிபதியின் இறையாண்மைக்குட்பட்ட தீர்மானமாகும் எனவும் அதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அரச சேவையின் நியமனங்கள் மற்றும் அரச சேவை செயற்பாடுகள் தொடர்பில் வெளிநாடுகள் தலையிடுவது சிறப்பான ஒன்று அல்லவெனவும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த நியமனம் குறித்து குறிப்பிடுவது வருந்தத்தக்கது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இராணுவதளபதி #நியமனத்தில் #வெளிநாடுகள் #தலையிட #சவேந்திர டி சில்வா