Home இந்தியாபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை

பிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை

by admin


யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் யூனிசெப் பணிபுரிந்து வருகின்றது
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக   பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா ஆதரவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை ; புல்வாமா தாக்குதலின்போதும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தனது டுவிட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை எழும்போது, பிரியங்கா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் காரணமாக அவரை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மசாரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்  #பிரியங்கா சோப்ரா #பதவிவிலக்குமாறு #ஐநா #கோரிக்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More