Home உலகம்சூடானில் பழங்குடியினரிடையே மோதல்- 37 பேர் படுகொலை…

சூடானில் பழங்குடியினரிடையே மோதல்- 37 பேர் படுகொலை…

by admin

சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர் சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா ஆகிய பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகின்ற நிலையில் இந்த மோதல் கடந்த புதன்கிழமையில் இருந்து மேலும் அதிகரித்தது.

இதன்போது போர்ட் சூடான் பகுதியில் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து,புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை சபையினால் மாநிலம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் மாநில ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More