இந்தியா பிரதான செய்திகள்

நாசாவுக்கு செல்லும் 10ம் வகுப்பு தமிழக மாணவி


தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல தேர்வாகியுள்ளார்.

‘கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வருகிறது.

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் ஜே. தான்யா தஸ்னம், சாய் புஜிதா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் முதல் இடம் பிடித்த ஜே. தான்யா தஸ்னம் என்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அவர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஒரு வாரம் தங்கியிருக்கவுள்ளார். அவர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றி பார்ப்பதோடு, அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #நாசா #தமிழக #மாணவி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.