உலகம் பிரதான செய்திகள்

50 டொலர்கள் கொள்ளையடித்தமைக்காக 36 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை


50 அமெரிக்க டொலர்களை அங்காடி ஒன்றிலிருந்து திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறை வைக்கப்பட்டவரை அமெரிக்காவின் அலபாமா மாகாண நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் 1970களில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஆல்வின் கென்னார்ட் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது 58 வயதாகின்ற ஆல்வின் தான் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் செய்துகொண்டிருந்த தச்சர் வேலையை மீண்டும் தொடருவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு, அவருக்கு 22 வயதிருக்கும்போது, கையில் கத்தியுடன் அங்காடி ஒன்றில் கொள்ளையடித்த குற்றத்திற்காக இவருக்கு பிணையில்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தின்போது ஆல்வின் யாரையும் தாக்கவோ அல்லது காயப்படுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  # டொலர்கள்  #கொள்ளை #சிறை #விடுதலை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.