யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல் இன்று காலை சுப நேரத்தில் நாட்டப்பட்டது. ஏ9 பிரதான வீதியை இணைக்கும் செம்மணி வீதியில், 6 மில்லியன் ரூபா நிதியில் நல்லூர் வரவேற்கின்றது வளைவு நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை சுப நேரத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில், அடிக்கல் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் நாட்டி வைக்கப்பட்டது. குறித்த வளைவில், நல்லூர் ஆலயத்தினை அடையாளப்படுத்தும் சிற்பங்களும் வடிவமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவல் ஆனல்ட், ஆணையாளர் த.ஜெயசீலன், நல்லூர்,கோப்பாய் பிரதேச செயலளர்கள், நல்லூர், கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், கல்விக் காருண்யன் ஈ.எஸ்.பி.நாகரத்தினம், என பலரும் பங்கெடுத்திருந்தனர். அடிக்கல் நாட்டும் நிகழ்வின் கிரியைகளை நல்லூர் ஆலய பிரதமகுரு வைகுந்தவாசக் குருக்கள் நெறிப்படுத்தினார்.