Home பிரதான செய்திகள்இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான T20யில் நியூசிலாந்து வெற்றி பெற்றது…

இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான T20யில் நியூசிலாந்து வெற்றி பெற்றது…

by admin

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் 175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர் 48 ஓட்டங்களையும் கிராண்ட் ஹோம் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் லசித் மாலிங்க 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More