198
பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த துப்பாக்கி சூட்டுக்காயத்தால் சிப்பாயின் கால் ஒன்று சிதைவடைந்துள்ளதுடன், இடுப்புப் பகுதியிலும் காயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் சுயநினைவற்ற நிலையில் உள்ளதால் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் நிசாந்த (வயது-21) என்ற சிப்பாயே படுகாயமடைந்தவராவார்.
Spread the love