மன்னார் விடத்தல் தீவு பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று (18) உயர் நீதிமன்றத்திலிருந்து மீளப்பெறப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சீராக்கல் மனுவொன்றை சமர்ப்பித்து, குறித்த திட்டம் மீளப்பெறப்படுவதாக அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தாா்.
அந்த அறிவிப்புக்குப் பின்னர், மனுதாரர்கள் குறித்த அடிப்படை உரிமை மனுக்களை மீளப்பெற்றுள்ளனர். சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட 5 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

