Home இலங்கையுத்த காலத்தில் ஏதிலிகளாக தமிழகம் சென்ற 27 பேர் நாடு திரும்பியுள்ளனர்…

யுத்த காலத்தில் ஏதிலிகளாக தமிழகம் சென்ற 27 பேர் நாடு திரும்பியுள்ளனர்…

by admin


கடந்த யுத்த காலப்பகுதியில் மன்னார் பிரதேசத்தில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியா, தமிழ்நாடு நோக்கி இடம்பெயர்ந்த இலங்கையின் ஏதிலிகள் சிலர் நேற்று (05.09.19) பிற்பகல் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு, ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து அவர்களை மீள இந்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தனர். 27 பேர் கொண்ட இந்தக் குழுவில் 11 பெண்களும் 10 ஆண்களும் மற்றும் 6 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருக்கோணமலை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்டஇவர்கள் மீண்டும் தமது சொந்த ஊர்களை நோக்கி செல்லவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More