148
பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். புகையிரத நிலையம் சென்ற அமைச்சருக்கு புகையிரத நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாழ்ப்பணத்தில் நாளை சனிகிழமை என்டப்பிரைஸ் சிறிலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வினை ஆரம்பித்து வைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ளார்.இந்நிகழ்வின் ஊடாக தொழில் முயற்சியாளர்களுக்கு பல உதவி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இரு நாட்கள் நிற்கும் அமைச்சர் மங்கள பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
Spread the love