158
யாழ்.மீசாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் காவற்துறையினர் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்தார்.சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
Mayurappriyan
Spread the love