உலகம் பிரதான செய்திகள்

அமேசன் காட்டை பாதுகாக்கும் உடன்படிக்கையில் 7 தென்னமெரிக்க நாடுகள் கைச்சாத்து

அமேசன் காட்டை பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென்னமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. பொலிவியா , பிரேசில், கொலம்பியா , ஈக்வடோர், கானா , பெரு மற்றும் சுரிநம் ஆகிய நாடுகளே இவ்வாறு இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஏழு நாடுகளும் ஏற்கனவே பழங்குடியின மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற நிலையிலேயே இவ்வாறு இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இவ்வாண்டில் மட்டும் அமேசன் காடுகளில் 80,000 தீ பரவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. #அமேசன் #பாதுகாக்கும் #உடன்படிக்கை #தென்னமெரிக்க  #கைச்சாத்து

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.