Home இலங்கைநவாலியில் வன்முறை கும்பல் அட்டகாசம்….

நவாலியில் வன்முறை கும்பல் அட்டகாசம்….

by admin

நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே வீட்டில் இருந்தவர்களை வாள்களைக் காண்பித்து மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருள்கள், தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாள்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் காவற்துறையினர் அசமந்தமாகச் செயற்படுவதாக பொது மக்கள் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More