Home பிரதான செய்திகள்   ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

  ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

by admin


இளம் வயதில் அணித்தலைவராக பதவி ஏற்ற ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார். பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 224 ஓட்ட வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்ட ரஷித் கான் இளம் வயதில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற நிலையில் இவ்வாறு சிறப்புமிக்க வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனைப் படைத்த ரஷித் கான், அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்ற அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் அணித்தலைவராக அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றி முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதுடன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இதேவேளை டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 10 நாடுக்ளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பங்களாதேஸ் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  #ரஷித்கான்  #சாதனை #ஆப்கானிஸ்தான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More