இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக் பகுதியில் கடல்மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதனையடுத்து தென்னிந்தியா முழுவதனையுமே எச்சரிக்கையுடன் இருக்குமாறு உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சர் கிரீக் ஒட்டிய கடல் பகுதியில் கேட்பாரற்று சில படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .இதில் இருந்து யாரும் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனரா என ஆராயப்பட்டு வருகிறது. மேலும் ராணுவம் முழு அளவில் எதனையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. சதித்திட்டம் ஏதும் இருந்தால் அது சரியான வழியில் முறியடிக்கப்படும் என ராணுவ தென்பகுதி லெப்டினன்ட் ஜெனர கமாண்டர் எஸ்.கே. சைனி தெரிவித்துள்ளார்
கடந்த 2008ல் செப்.26 ல் மும்பையில் நடந்த தாக்குதல் போல் ஏதும் நடக்கக்கூடுமோ என்ற அச்ச சூழல் எழுந்துள்ளது. படகில் இருந்து வந்தவர்கள் அரபிக்கடல் வழியாக நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து குஜராத், மகாராஷ்ட்டிரா, ஆந்திரா, கர்நாடாகா, தமிழகம், கேரள பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது