இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக பலவீனமாக உள்ளதென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரம் பற்றி ஆய்ந்து அவ்வப்போது மதிப்பீடுகள் செய்யும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரின் ரைஸ் நேற்றையதினம் டெல்லி வந்திருந்த நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகின்றதுடன் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நீடித்த பலவீனம் நிலவி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை பற்றி உள்நாட்டில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளரே இவ்வாறு கருத்து சொல்லியிருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #இந்தியா #பொருளாதாரம் #பலவீனமாக #சர்வதேச நாணய நிதியம்