அல்-கய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் அமெரிக்க ராணுவத்தினர் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
ஹம்சா பின் லேடன் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக உளவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில் டிரம்ப் தற்போது அதனை உறுதி செய்துள்ளார்.
அல்-கய்தாவின் முக்கிய உறுப்பினரும், ஒசாமா பின் லேடனின் மகனுமான ஹம்சா பின் லேடன், ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்கா நடத்திய தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது கொல்லப்பட்டார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் டிரம்ப் தெரிவித்துள்ளார். தந்தை ஒசாமா பின்லேடனுக்கு அடுத்து, அல்-கய்தா அமைப்பின் தலைவராக இவர் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #அல்-கய்தா #பின்லேடனின் #டிரம்ப் #ஹம்சா