146
மயூப்பிரியன்
தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுத்தியும் , தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும் யாழில். எழுக தமிழ் பேரணி இன்று நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவையில் ஏற்பாட்டில் இன்று காலை நல்லூர் மற்றும் யாழ். பல்கலை கழக முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி யாழ்.கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளியை சென்றடைந்தது.
அங்கு எழுக தமிழ் கூட்டம் நடைபெற்று , பிரகடனம் வாசிக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றத்தை நிறுத்து , போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து , எல்லா அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பக்க சார்பற்ற சர்வதேச விசாரணைகளை முன்னெடு , தமிழர் தாயக நிலப்பரப்பில் இராணுவ மயமாக்கலை நிறுத்து , போரினால் இடம்பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்று உள்ளிட்ட ஆறு பிரதான கோரிக்கைகளை முன் வைத்து குறித்த எழுக தமிழ் நடத்தப்பட்டது.
Spread the love