Home இந்தியாசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by admin


சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 30ஆம் திகதி குண்டுகள் வெடிக்கும் என டெல்லியிலிருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது.  செப்டம்பர் 9ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதம், நேற்று செப்டம்பர் 16ம் திகதி தான் பதிவாளருக்கு கிடைத்துள்ளது

அந்தக் கடிதத்தில், மேற்கு டெல்லி, மோதி நகரைச் சேர்ந்த சர்வதேச காலிஸ்தான் தீவிரவாத இயக்க ஆதரவு இயக்கத்தைச் ( (International Khaalistaan Support Group)) சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நக்பால் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

‘தெற்கிலிருந்து மத்தியப்பிரதேசம், அங்கிருந்து உத்தரப்பிரதேசம், அங்கிருந்து டெல்லி என எனது இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பேன். அதே போல அலைபேசி எண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பேன்.

நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்வது… வரும் 30ஆம் திகதி எனது மகனுடன் இணைந்து சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்தினுள், பல இடங்களில் குண்டுகள் வெடிக்கச் செய்வேன்’ எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #சென்னை #உயர் நீதிமன்றத்திற்கு #வெடிகுண்டு #மிரட்டல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More