Home இந்தியாபாலியல் பலாத்கார  வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர்  சின்மயானந்தா கைது…

பாலியல் பலாத்கார  வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர்  சின்மயானந்தா கைது…

by admin

பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும்  பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான   சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில்  உச்ச நீதிமன்றின்  வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது.

முறைப்பாடு அளித்த மாணவியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம்  விசாரணை நடத்தப்பட்டது. இதைனையடுத்து  சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் இன்று ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, உச்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்மயானந்தா கைது செய்யப்பட்டதையொட்டி  அவரது வீடு மற்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பலத்த காவற்துறைப்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற நோயாளிகள் கடுமையான பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More