ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் பான்பசிபிக் சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு அந்நாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார்.
உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா முதலில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் யுலியா பதிண்ட்செவாவுடன் போட்டியிட்டு 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை எதிர்கொண்டடு 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா, ரஸ்யாவின் பாவ்லிசென்கோவாவுடன் போட்டியிடவுள்ளார். அதில் வெற்றி பெறுபவருக்கு பணப்பரிசுடன் 470 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #பான்பசிபிக் #நவோமிஒசாகா #இறுதிப்போட்டி