உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்க விமானம் கடத்தல் – சம்பந்தப்பட்டவர் 34 ஆண்டுகளுக்குப் பின் கைது


அமெரிக்கா விமான கடத்தல் ஒன்றின் கடத்தலுடன் தொடர்புடைய லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவர் 34 ஆண்டுகளுக்குப் பின் கிரீஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டி.டபுள்யூ.ஏ 847 என்னும் விமானம் 1985ஆம் ஆண்டு ஏதென்ஸிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கடத்தப்பட்டிருந்தது. இஸ்ரேலிய சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்த கடத்தல்காரர்கள் விமானத்திலிருந்த பயணிகள் சிலர் மீது தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலில் அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்தநிலையில் இந்த விமானக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய கைது லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவருக்கு தற்போது 65 வயது என்ற தகவல்கள் மட்டும்; வெளியாகி உள்ளதுடன் ஏனைய விவரங்களை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  #அமெரிக்கவிமானம் #கடத்தல் #கைது#லெபனான்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.