Home இலங்கைபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…

பிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…

by admin


ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் புதன் கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப் படவுள்ளதாக பிரதி அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றம் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் மற்றும் ஒரு கலந்துரையாடல் இன்று (22) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இறுதி முடிவு ஒன்றை எட்டும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவே்வாறே, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More