5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (26) மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையம், தேசிய கட்ட ஆய்வு நிறுவகம், தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் சகல விடுமுறைகளும் உடனும் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது #மண்சரிவு #அபாயஎச்சரிக்கை #நீடிப்பு